இந்தோனேசியாவில் நிலநடுக்கம் பதிவு..!
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.வடக்கு சுமத்ராவின் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ மேற்கே இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன.இதன் காரணமாக மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் சுனாமி ஏற்படும் என்ற அச்சத்தில் பலர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற நிலையில் உள்ளனர்.