பதிவுகள்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாகாண ஆளுநர்களுடன் சந்திப்பு…!

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று மாகாண ஆளுநர்களைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்

இதன்போது, ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குள் அமைச்சு மட்டத்திலான புனாய்வுப் பிரிவுகளை நிறுவ தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்

மாகாணங்களில் உட்கடடமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் அவை தொடர்பிலான சவால்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், அந்தப் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்கப்பட்டது

கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு நிதி மாகாண சபைகளுக்குக் கிடைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துரைத்தனர். அந்த நிதிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, உட்பட மகன் ஆளுநர்கள் அனைவரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *