நாடு திரும்புகின்றார் பசில் ராஜபக்ச- அரசியல் அதிரடியா…?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை அவர் நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அமெரிக்காவிற்குச் சென்ற பசில் ராஜபக்ச அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையிலேயே அவர் நாடு திரும்பவுள்ளார்.
எவ்வாறாயினும், அவர், நாடு திரும்பிய பின்னர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவாரா இல்லையா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.