ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான 22 கஜமுத்துடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட – இருவர் கைது.

ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவரை நேற்று (21) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட யானை தந்தத்தின் பாகமான 4 கஜமுத்துக்களை எடுத்து வந்து வியாபாரத்தில் ஈடுபட்டபோது அங்கு மாறு வேடத்தில் இருந்த பொலிசார் சுற்றிவளைத்து அவரை கைது செய்தனர்
இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கஜமுத்துக்களை விற்பனை செய்த அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரை 18 கஜமுத்துக்களுடன் ஏறாவூரில் வைத்து நேற்று மாலை 5.00 மணிக்கு கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் ஏறாவூரைச்சேர்ந்த 57 வயதுடையவர் எனவும் இவர் கடந்த 2005 ம் ஆண்டில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டவர் எனவும் இவர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
