தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது – விரைவில் கைது செய்ய நடவடிக்கை

ஹெவ்லொக் சிட்டி வீடமைப்புத் தொகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானதென பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வடமத்திய மாகாணத்தை சேர்ந்த அந்த அரசியல்வாதி தனது உதவியாளர் ஒருவரினூடாக இந்த ஆயுதத்தை மேற்படி தொடர்மாடியில் மறைத்து வைத்திருந்ததாகவும் இதுபற்றிய விபரத்தை வீட்டு உரிமையாளரான பெண்மணி அறிந்து வைத்திருக்கவில்லை என்றும் விசாரணையில் அறியமுடிந்துள்ளது.
எவ்வாறாயினும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியையும் அவரது உதவியாளரையும் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.