பதிவுகள்

மட்டக்களப்பில் முதலைக் கடித்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம், மந்திரியாறு பகுதியில் கடந்த 20 மே 2025 அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது முதலைக் கடித்துச் சென்ற 28 வயதுடைய இளம் குடும்பஸ்தர் வி. கிருஸ்ணதீபன் (அசோக்) என்பவரின் சடலம், இரண்டு நாட்கள் கழித்து இன்று 22 மே 2025 அன்று இடுப்புக்கு மேற்பகுதியுடன் உருகுலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த இவர், சம்பவத்தின்போது மந்திரியாறு நீரோடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். முதலைக் கடித்துச் சென்றதையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இரு நாட்களாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலை, இடுப்புக்கு கீழ் பகுதி இல்லாத நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான வைத்திய பரிசோதனைகளை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *