கடைசிநேரம் அடித்த அபாரமான கோல் | இங்கிலாந்து மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து இந்தத்தடவையும் நுழைந்துள்ளது.
இரண்டாவது அரையிறுதிப்போட்டியின் கடைசி நேரத்தில் நெதர்லாந்துக்கு ஒருகோலை அடித்து , போட்டியை 2-1 என்ற கோல்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

போட்டியின் முதற்பாதியில் ஏழாவது நிமிடத்தில் முதல் கோலை  நெதர்லாந்து வீரர் Simons அடித்தார். அதையடுத்து போட்டி சூடுபிடிக்க,
தொடர்ந்து இங்கிலாந்துக்கு ஒரு பனால்ற்றி வாய்ப்புக்கிடைக்க அதை கோலாக்கினார் இங்கிலாந்தின் அணித்தலைவர் ஹரி கேன்.
தொடர்ந்து போட்டியில் மாறி மாறி இரு அணிகளுக்கும் வாய்ப்புக்கள் பல வந்திருந்தன.
கோல்கம்பத்தில் பட்டும் , கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டும் அந்த வாய்ப்புக்கள் நழுவ, போட்டியின் கடைசி நேரத்தில் , இங்கிலாந்தின் வீரர் Watkins, மிகவும் நுணுக்கமாக அடித்து அபாரமாக ஒரு கோலை இங்ங்கிலாந்துக்கு பெற்றுக்கொடுத்தார்.
நிறைவில் 2-1 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.
1988 ம் ஆண்டுக்குப்பின்  இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்  போராடிய நெதர்லாந்து , நிறைவில் தோற்று வெளியேறியது. கடந்த தடவை பனால்ற்றி வாய்ப்பில் வெற்றிக்கிண்ணத்தை தவற விட்ட இங்கிலாந்து அணி,
இரண்டாவது தடவையாக  ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *