ஹமாஸ் போராளிகளின் இராணுவ தளபதி உயிரிழப்பு..!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் இராணுவ தளபதி உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்பு படையே இதனை அறிவித்துள்ளது.ஹமாஸ் போராளிகளின் இராணுவ தளபதியான முஹமது தைப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த வருடம் 7 ம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர் இவர் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் 13 ம் திகதி கான் யூனிஸ் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தது.அந்த பகுதியில் முஹமது தைப் வசித்து வந்த நிலையில் முஹமது தைப் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வந்தது.
இந்த நிலையிலேயே இஸ்ரேலின் பாதுகாப்பு படை ஹமாஸ் போராளிகளின் இராணுவ தளபதி உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இஸரேலானது பாலஸ்தீனத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தது. இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.
இதே வேளை ஈரானின் தெஹ்ரானில் வைத்து ஹமாஸ் போராளிகளின் தலைவர் இஸ்மாயில் ஹனி படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு யாரும் உரிமை கோராத நிலையில் இஸ்ரேல் தான் படுகொலை செய்துள்ளதாக ஹமாஸ் போராளிகளும் ஈரானும் தெரிவித்துள்ளது.இதற்கு பதிலடி கட்டாயம் வழங்கப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.