தேசத்தை மேம்படுத்த சிறந்த வழி..!
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றைய தினம் நியுசிலாந்து சென்றுள்ளார்.இதன் போது நியுசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை முர்மு சந்தித்தார் .
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான கல்வி,வர்த்தகம்,காலாச்சாரம் சம்பந்தமான விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இதே வேளை வெலிங்டனில் நடைப்பெற்ற சர்வதேச கல்வி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
இதன்போது ‘கல்வி’ என்பது ஒரு தனிமனிதனின் முன்னேற்றத்துக்கானது மட்டுமல்ல அது சமூகம் மற்றும் தேசத்தை முன்னேற்றுவதற்கான கருவியாகும் என்று குறிப்பிட்டார்.மேலும் குறிப்பிடுகையில் இந்திய மாணவர்கள் 8000 பேர் நியுசிலாந்தில் சிறந்த கல்வியை பெற்றுவருவதாக தெரிவித்தார்.