நீங்கள் இங்கு சென்றதுண்டா..?

மீ முறே

இலங்கையின் பாரம் பரிய கிராமமாகவும் சுற்றுலாத்தளமாகவும் விளங்குவது மீமுறே கிராமம் ஆகும்.

இந்த கிராமம் ஆனது மத்திய மலை நாட்டில் கண்டி மாவட்டத்தில் உன்னஸ்கிரிய உடுதும்பர பிரதேசங்களுக்குட்டபட்டதாகவும் நக்லஸ் வனாந்தரப்பகுதிகளுக்குட்பட்தாகவும் காணப்படுகிறது.

இந்த பகுயில் இயற்கை வனப்புகளும் பாரிய மரங்களும் படி வயல் வெளிகளும் ,அழகிய நீர் நிலைகளும் காணப்படுகிறது.

இந்த அழகினை கண்டு களிப்பதற்காக உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.எனினும் இலங்கையின் மற்றைய பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுடன் ஒப்பிடுகையில் மிக குறைந்தளவிலானவர்களே வருகை தருகின்றனர்.

குளிர்மையான காற்று.அமைதி,சுத்தமான மலை நீர் ,பாரம்பரிய கிராம வீடுகள்,வீடுகளுக்கு பாதுகாப்புக்காக கருங்கற்களால் கட்டப்பட்ட வேலி என்பவற்றை இங்கு கண்டு அனுபவிக்கலாம். மிக முக்கியமாக இந்த பிரதேசத்தில் மொபைல் சிக்னல் என்பது பெரிதளவில் இருக்காது. நாம் நிம்மதி யாக இருக்கலாம்.

மேலும் இந்த பிரதேசத்தில் சிங்கள மக்களே அதிகளவில் வசிக்கிறார்கள்.இந்த மக்கள் அனைவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இருக்கும் காணியின் அளவானது ஒருவருக்கு பல ஹேக்கர் அளவில் காணப்படுகிறது.இவர்களது தொழிலானது மிளகு தொழில் காணப்படுகிறது. இதன் மூலமே இவர்கள் தங்களது வருமானத்தை ஈட்டுகின்றனர்.இந்த மிளகின் சுவைக்கும் காரத்திற்கும் வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்று அடித்து சொல்லலாம்.ஏன் எனில் அவ்வளவு தரமானது.

இந்த பிரதேச மக்களுக்கு சுமார் 5 வருடங்களுக்கு முன்பதாக தான் மின்சாரம் வளங்கப்பட்டது. ஆனால் இன்று வரையில் நீர் வழங்கப்படவில்லை. ஆனால் இங்கு நீரிற்கு பஞசமில்லை,மலை நீரினை தான் இந்த பிரதேச மக்கள் பயனபடுத்துகின்றனர்.

இந்த பிரதேசத்திற்கு ஒரே ஒரு இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுப்படுகின்றது. இது மீமுறே இற்கும் உன்னஸ்கிரிய விற்கும் ஆகும். இதிலே அதிகளவான மக்கள் தங்களது போக்குவரத்தினை மேற்கொள்கின்றனர்.

இந்த பிரதேசத்திற்கு செல்பவர்கள் தங்களக்கு தேவையான உணவுகளை எடுத்து செல்ல வேண்டும் ஏன் எனில் உணவு பொருட்களை வாங்க கடை எதுவும் இப்பிரதேசத்தில் இல்லை.

இங்கு கிதுல் பாகு, கிதுல் கருப்பட்டி என்பனவும் தரமானதாக கிடைக்கப்பெறும்.

இயற்கையான சூழலில் உங்களது பொழுதினை கடத்திட நினைத்தால் இங்கு சென்று வரலாம்.

எழுதுவது -திகன கலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *