இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ரொக்கெட் தாக்குதல்..!
ஹிஸ்புல்லா அமைப்பானது இஸ்ரேல மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இஸ்ரேலின் வடக்கு திசையில் நேற்று நள்ளிரவு முதல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது சுமார் 70 ரொக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனையடுத்து இஸ்ரேலானது இராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தலைமையில் அவசரக்கூட்டம் நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த இநத முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாகவும்,ஹமாஸ் போராளிகளின் தலைவர் சயீத் கொல்லப்பட்டதற்கு எதிராகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிற்கு மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் லெபனானை தளமாக கொண்டியங்கும் ஹிஸ்புல்லா அமைப்பானது ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவை தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.