பணயக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்..!

ஹமாஸ் போராளிகளின் வசம் பணயக்கைதிகளாக இருப்போரை விடுதலை செய்ய வேண்டும் .அவ்வாறு விடுதலை செய்யாவிட்டால் மத்திய கிழக்கில் ஹமாஸ் போராளிகள் நரக விலை கொடுக்க வேண்டும் என் அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டு இருக்கும் அவர்” நான் ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள ஜனவரி 20 ம் திகதிக்கு முன்பு பணயக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.ஜனாதிபதியாக பதவி ஏற்றப்பின்னர் பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் அதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது கடந்த ஓராண்டிற்கு மேலாக தாக்குதல் நடத்திவருகின்றது. இந்த போரில் இஸ்ரேலிற்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *