தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்..!
தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அண்மையில் தென்கொரிய ஜனாதிபதி அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருந்தார் .
இதனையடுத்து பல எதிர்பலைகள் வந்த நிலையில் அவசர நிலை இரத்து செய்யப்பட்டது.இதனையடுத்து தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வழுப்பெற்றன. போராட்ட காரர்களால் நாடாளுமன்றம் முற்றுகை இடப்பட்டது.இதனையடுத்து ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்கம் கொண்டுவரப்பட்டது.மொத்தம் 300 அமைச்சர்கள் உள்ள நிலையில் 204 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.இதனையடுத்து ஜனாதிபதி யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து தென்கொரிய மக்கள் தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.