பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு..!
பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில், மூவர் உயிரிழந்ததுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்தவர்கள் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,
சிலர் கண்டி வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.