கிராமத்தில் ஓர் நாள்..!
ஆண்
பொங்க பானைத் தூக்கிக்கிட்டு
பொழுது போக்க போறபுள்ள
பொங்கப் பானை உன்னழகை
பொங்க வைக்க வரட்டுமாடி
பெண்
பொங்க பானைத் தூக்கிக்கிட்டு
பொழுது போக்க போறேனடா
கல்லுக் கூட்டி அடுப்புமூட்ட
கொஞ்சம் துணைக்கு வரியாடா
ஆண்
கல்லு கூட்டி அடுப்புமூட்ட
கற்கள் இரண்டு போதுமடி
மல்லுக் கட்டி அடுப்பெரிக்க
மாமன் துணைக்கு வரட்டுமாடி
பெண்
கம்பங் காட்டு மூலையிலே
காத்திருக்கும் அத்தை புள்ள
வாடிபட்டி மல்லி யிட்டு
விழிப் பூத்து காத்திருக்கேன்
ஆண்
கம்பங் காட்டு மூலையிலே
கரிசல் காட்டு குருவியடி
கம்பன் வடித்த கவிதையிலே
கானம் பாடி திரியுதடி
பெண்
அலங்காநல்லூர் பக்கம் வாடா
ஆசை முத்தம் தருவேனடா
காளை நல்ல கட்டழகா
காளைதனை அடக்கி வாடா
ஆண்
மாட்டையுந்தான் அடக்கி வாரேன்
மலையோரம் வாடி புள்ள
மங்கை யுன்னை கூட்டிக்கிட்டு
மாடாய் மேயப் போறேனடி
பெண்
மாடாய் மேயும் உன்னழகில்
மாக்காச் சோளம் என்னழகு
மாமனுக்கு நான் பறிமாற
மாமனவன் இங்கு பசியாற
தமிழ் ஆர்வலர்
கவித்தேடல்
மு.மொய்தீன்
(வடசென்னை)
17-1-2025-