மட்டக்களப்பு   பனிச்சையடி   “QUEEN OF PEACE PRESCHOOL” முன்பள்ளி பாடசாலையின்  கண்காட்சி  நிகழ்வு

சமாதானத்தின் இராக்கினி முன்பள்ளியானது 2007 ஆம் ஆண்டு அருட்பணி A.நவரெட்ணம் அடிகளாரினால் எஹட் கரிதாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பனிச்சையடியில் ஸ்தாபிக்கப்பட்டது .
தற்போது அருட்பணி C.வின்சஸ்லொஸ் அடிகளாரின் தலைமையில் மூன்று ஆசிரியர்களுடன் 40 சிறார்களுடன் “QUEEN OF PEACE PRESCHOOL” முன்பள்ளி இயங்கி வருகின்றது.

அத்தோடு பெற்றோரின் ஒத்துழைப்புடன் கிளீன் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளின் வேலைத்திட்டத்தின் கீழ் கழிவு பொருட்களை பயன்படுத்தி முதன்முறையாக இக்கண்காட்சி முன்பள்ளியில் நடை பெறுவது சிறப்பம்சமாகும் .
இக்கண்காட்சியில் பிரதம அதிதியாக முன்பள்ளி பருவ உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் அவர்களும் வின்சஸ் லெஸ் அடிகளார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .
இக்கண்காட்சியில் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பும் காணக்கூடியதாக இருந்தது .
பிரதேசவாழ் பொதுமக்களும் , ஆசிரியர்களும் கண்காட்சியில் கலந்து சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *