தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை..!
ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு நாளை வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற இருக்கிறது.

இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.