புதிய அரசியலமைப்பு வருமா அதன் உள்ளடக்கம் என்ன ?சாணக்கியன் எம்பி சபையில் கேள்வி

வடக்கு மக்கள் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வை எதிர்பார்ப்பதாகவும், புதிய அரசியலமைப்பு வருமா? வராதா? எனவும் சாணக்கியன் எம்.பி சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று(27) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்த அவர்,
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பொறுப்புக் கூறல் விடயத்தில் மிக கரிசனையுடன் காணப்படுகின்றனர். யுத்தத்தினால் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றனர். இதேவேளை, வடக்கு மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளனர். அரசாங்கம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு பற்றி தெளிவாக கூறியுள்ளது.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் ஒன்றை கேட்க விரும்புகின்றேன். வடக்கு மக்கள் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வை எதிர்பார்க்கின்றனர். புதிய அரசியலமைப்பு வருமா வராதா? அவ்வாறு கொண்டுவரப்பட்டால் அதன் உள்ளடக்கம் என்ன? என கேள்வி எழுப்பினார்.