வடகொரியா ,மேலதிக இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது-தென்கொரியா..!
ரஷ்ய உக்ரைன் போர் இடம் பெற்று வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனிற்கு ஆதரவு தெரிவித்து ஆயுதம் ,பொருளாதாரம் என பல வழிகளில் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றன.இந்நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான வட கொரியா மேலதிக இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பத்து ஆயிரம் இராணுவ வீரர்களை வடகொரியாவானது ரஷ்யாவிற்கு அனுப்பி இருந்தது.இவர்களை குர்ஸ்க் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டனர்.உக்ரைன் தாக்குதல் மற்றும் பனியின் காரணமாக பலர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.