புதைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்பு

கண்டி – வத்துகாமம் வீதியில் நவயாலதென்னை பகுதியில் மகாவலி கங்கைக்கும் பிரதான பாதைக்கும் இடையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்று கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 8 மில்லி மீட்டர் நீளமுடைய கைத்துப்பாக்கி ஒன்றே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த கைத்துப்பாக்கி ஏதேனும் ஒரு குற்றச் செயலுக்காக இவ்விடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டைபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.