இஸ்லாமிய உள்ளங்களுக்கு தோழர் பிரபு (எம்பி) விடுத்துள்ள ரமழான் வாழ்த்துச்செய்தி.

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமழான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களால் பசித்திருந்து, அதிகாலை முதல் மாலை வரையில் உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல் மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் நோன்பிருக்கும் எனது இஸ்லாமிய உறவுகளின் நம்பிக்கையான இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் மூன்றாவது கடமையாகும்.
இப்புனித நோன்பெனும் கடமையானது முஸ்லிம் சமூகத்தால் மட்டுமல்லாமல், ஏனைய சமூகங்களாலும் மதிக்கப்படுகின்ற ஏற்றமான மாதமாகவும், அமைதியான செயற்பாடாகவுமே பார்க்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியானது தோழர் அநுரவின் தலைமையில் இந்நாட்டினை பொறுப்பெடுத்தற்குப் பிற்பாடு இலங்கையில் வாழும் இஸ்லாமிய உறவுகளால் மிகவும் மகிழ்ச்சியுடன் நோன்பிருக்கப் போகின்றார்கள் என்பதே எனது பார்வையாகவும், இஸ்லாமிய உள்ளங்களுக்கு நான் கூறுகின்ற வாழ்த்துச் செய்தியாகவும் உள்ளது என தான் விடுத்துள்ள ரமழான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.