ஜன்னல் வழியாக குழந்தையை வீசிய மாணவியின் காதலனுக்கு விளக்கமறிய

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவியொருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய அவரது 24 வயது காதலனை கைது செய்து கடந்த வெள்ளிக்கிழமை (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் வயிற்றுவலி என தெரிவித்து அதிகாலை 3.30 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆரம்ப சிகிச்சைக்காக குறுந்தரிப்பு அலகு வாட்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 5.00 மணிக்கு மலசல கூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய நிலையில் குழந்தை ஜன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் வீசிய குழந்தையை மீட்ட சம்பவம் இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவியை கர்ப்பமாக்கிய 24 வயதுடைய காதலனை நேற்று வெள்ளிக்கிழமை (28) கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.