வெற்றிகரமாக நிலவில் கால் பதித்த “புளுகோஸ்ட்”
தனியார் நிறுவனம் ஒன்று வெற்றிகரமாக நிலவில் கால் பதித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பயர்பிளை ஏரோஸ்பேஸ் நிறுவனம் கடந்த ஜனவரி 15 ம் திகதி புளு கோஸ்ட் என்ற விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டின் மூலம் நிலவிற்கு செலுத்தப்பட்டது.
இதனையடுத்து நேற்றைய தினம் விண்கலத்தில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது.நிலவின் வடகிழக்கு விளிம்பில் உள்ள பழங்கால எரிமலை குவிமாடத்தின் சரிவில் தரையிறங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த விண்கலமானது நிலவின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பியுள்ளது.அதில் அதன் கால் தடம் பதிவாகியுள்ளது.

இந்த விண்கலத்தில் மண் பகுப்பாய்வு ,கதிர்வீச்சு சகிப்பு தன்மை கொண்ட கணினி உள்ளிட்ட 10 கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .இந்த விண்கலமானது ஒரு நிலவு நாள் முழுவதும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மார்ச் 14 ம் திகதி சூரிய ஒளியை பூமி மறைக்கும் போது உயர் திறன் கொண்ட புகைப்படங்களை எடுத்து அனுப்பும் என்று தெரிவிக்கப்படுகின்றது.