பஞ்சாங்க நாட்குறிப்பு மற்றும் சிவ இலட்சனையை கையளிப்பு

இந்துகலாசார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பஞ்சாங்க நாட்குறிப்பு மற்றும் சிவ இலட்சனையை கையளிக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் அவர்களிடம் பிரதிகளை கையளித்தார். அத்தோடு ஆலயங்களுக்கும் இப்பஞ்சாங்க நாட்குறிப்பேடு வழங்கும் பொருட்டு கையளிக்கப்பட்டது.
இதன்போது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சர்மிளா பிரபாகரன் அவர்களும் உடனிருந்தார்.
