கடும் மழையை மீறி, கோலாகலமாக நடைபெற்ற தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி.


பட்டிருப்பு கல்வி வலையத்துக்கு உட்பட்ட தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு இறுதி போட்டி இன்று கடும் மழையும் மத்தியில் வித்தியாலய அதிபர் த.தேவராஜன் தலைமையில் தேற்றாத்தீவு பொதுவிளையாட்டு மைதானத்தில் இன்று (11) இடம்பெற்றது.

விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .J.J.முரளிதரன் மற்றும் விசேட அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரனும் மற்றும் ஏனைய பலதரப்பட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

முதலாவதாக அதிதிகளை பாடசாலை பாண்டு வாத்திய குழுவினரின் வரவேற்றலை தொடர்ந்து பாடசாலை மற்றும் தேசிய கொடியேற்றல் இடம் பெற்ற பின்னர், ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உத்தியோகமாக போட்டி நிகழ்வுகள் ஆரம்பித்தது முதல் நிகழ்வாக பாடசாலை இல்லங்களுக்கான அணி நடை இடம்பெற்றது.இதன் போது புலவர்மணி இல்லம் விபுலானந்தா இல்லம் நாவலர் இல்லம் என மூன்று இல்லங்களாக பாடசாலை மாணவர்கள் போட்டிக்காக பிரிக்கப்பட்டு இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இதனை பிரதம அதிதி ஏனைய அதிதிகள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் இருபாலருக்குமான ஓட்ட நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக இடம்பெற்றன நிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *