இங்கிலாந்து தெற்கு கடற் பரப்பில் இரு சரக்கு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!
இங்கிலாந்து தெற்கு கடற்பரப்பில் இரு சரக்கு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.
கிரிஸ் நாட்டிலிருந்து போர் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எரி பொருளை ஏற்றிக கொண்டு அமெரிக்காவிற்கு சென்ற கப்பலும் ஸ்கொட்லாந்திலிருந்து வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்திற்கு சென்ற கப்பல் ஒன்றுமே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரு கப்பல்களிலும் மொத்தம் 36 மாலுமிகள் பயணித்துள்ளனர்.இதில 35 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.ஒரே ஒரு மாலுமி மட்டும் காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.