அவள் ஓர் அன்னப்பூரணி..!

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்
✨✨✨✨✨✨✨✨ பெண்மை
✨✨✨✨✨✨✨✨
மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்தோமடி!
💥💥💥💥💥💥💥💥
பெண்களை பற்றி பெண்ணே (அடியேன்) பெருமிதம் கொண்டு படைத்த பா இதோ பா!
✨✨✨✨✨✨✨✨✨

✒️பெண்கள் வீட்டின் கண்கள்!

✒️பெண்கள் தாய்நாட்டின் உயிர்மூச்சு!

✒️தாய் தியாகத்தின் பிரதிபிம்பம்!.

✒️சகோதரி அன்பின் எல்லை!

✒️மனைவி தன் சேவையில் தாயாக மிளிர்கின்றாள்!

✒️அனைவருக்கும் அன்னபூரணியாக
உணவு இட்டு
தன்னுள்ளம் நிறைபவள்!

✒️மகள் தாய் வீட்டுப் பாசம்!
புகுந்த வீட்டுப் பெருமை!

✒️பெண்களுக்கே பாரதத்தில் முதலிடம்!

✒️கல்விக்கு கலைமகள்!
செல்வத்திற்கு அலைமகள்!
வீரத்திற்கு திடசக்திக்கு மலைமகள்!

✒️இங்கு யாவரும் பெண் தேவதையாய்
பெண் தெய்வமாய்
உதவுகின்றனர்!
நம்மிடையே
உலவுகின்றனர்!

✒️செந்தமிழுக்கு
முத்தமிழுக்கு
நற்றமிழுக்கு
பெருமை சேர்ப்பவள்
நம் குலப்பெண்கள்!

✒️ஆக மிகச் சிறந்தது நம் மகளிர் உலகம்!

✒️பெண்மையை போற்றுங்கள்!
பெண்களாய்
பிறந்ததில்
பெரும் மகிழ்ச்சி
பெற்றிடுவோம்!
✨✨✨✨✨✨✨✨✨
பா ஆக்கம்
என்றும் அன்புடன்
நா.ஆனந்தி சேது
சீர்மிகு சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *