ரயில் ஒன்று கடத்தப்பட்டு,182 பேர் பணயக்கைதிகளாக பிடிப்பு..!
பாகிஸ்தானில் ரயில் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.ஜாபர் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலே கடத்தப்பட்டுள்ளது.பலூச் விடுதலை இராணுவம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு குறித்த ரயிலை கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த ரயிலில் 182 பேர் இருந்ததாக தகவல்வெளியாகியுள்ளது.இவர்கள் அனைவரையும் குறித்த அமைப்பு சிறைபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக குறித்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“ஜாபர் எக்ஸ் பிரஸ் ரயிலை பலூச் விடுதலை இராணுவத்தின் போராளிகள் சிறை பிடித்ததும்,182 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறோம்.கடந்த 06 மணித்தியாலத்திற்கு அதிகமாக அவர்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.இந்த நடவடிக்கையின் போது 8 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதனால் எதிரிகளின் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.எனினும் போராளிகள் தரப்பில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று ” தெரிவித்துள்ளது.