பதிவுகள்

இரத்த நிலவு” எனப்படும் “Blood Moon” 13 மார்ச் 2025 மாலை தொடக்கம் 14 மார்ச் 2025 அதிகாலை வரை தென்படவுள்ளது.

பூமி, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் நேரடியாக நகரும்போது ஏற்படும் ஒரு அரிய முழு சந்திர கிரகணம்

ஒரு நிழல் நிலவின் மேற்பரப்பை படிப்படியாக இருட்டாக்குகிறது, இதன்போது ஒரு கட்டத்தில் கடும் செம்மஞ்சள் நிறம் அல்லது சிவப்பு நிறத்தை நிலவு பெறுகின்றது, அதனால் இவ்வாறு தோன்றும் நிலவு “இரத்த நிலவு” என சொல்லப்படுகின்றது

இது ‘ஆயிரம் சூரிய அஸ்தமனங்களால்’ ஏற்படுகிறது என நாசா சொல்கிறது. “பூமியின் அனைத்து சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்களால் சந்திரனில் வரையப்பட்ட பல்வேறு வண்ணங்கள்” என்று நாசா இதை வர்ணிக்கின்றது.

சுமார் 863 மில்லியன் மக்கள் “இரத்த நிலவை” காண்பார்கள் என சொல்லப்படுகின்றது. இந்த கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை முழு கிரகணமும் தெரியும் இடத்தில் சுமார் 863 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர், சுமார் 3.2 பில்லியன் மக்கள் அதாவது கிட்டத்தட்ட 40% பேர் இரத்த நிலவின் ஒரு கட்டத்தையாவது காண்பார்கள்.

இது 2025 ஆம் ஆண்டில் தோன்றக்கூடிய முழு நிலவுகளில் மிகச்சிறியதாகும் . கிரகணம் ஆரம்பித்து 65 நிமிடங்களுக்கு நிலவானது “இரத்த நிலவாக” மாறும்

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பகுதி முழுவதும் இந்த முழு சந்திர கிரகணத்தின் அற்புதமான காட்சி முழுமையாக தெரியும் கலபகோஸ் தீவுகள் (Galápagos Islands), ஈக்வடார் (Ecuador) ஆகிய இடங்கள் இந்த இரத்த நிலவை முழுமையாக பார்ப்பதற்கு ஏற்ற இடங்கள் என நாசா அடையாளப்படுத்தியுள்ளது.

எனினும், இலங்கையில் உள்ள நாமும் ஒரு வித்தியாசமான சிவந்த நெருப்பு போன்ற நிலவை காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *