பதிவுகள்

யாழில் ஆதரவற்ற தெருநாய்களை வளர்க்கும் குடும்பம்

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரங்களில் ஆதரவற்று நிற்கும் நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது தற்போது 39 நாய்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நாய்களை தங்களது சொந்த பிள்ளைகள் போலவே வளர்த்து வருகின்றனர்.

அயல் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், குறித்த குடும்பத்தினரால் வளர்க்கப்படுகின்ற நாய் ஒன்றின் மீது தாக்குதல் நடாத்திய நிலையில், அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன், அவர்களது நாய்கள் காணாமல்போகின்ற சந்தர்ப்பங்களில் ஜோசியம் பார்த்தல், சமூக ஊடகங்கள் மூலம் பதிவுகளை பகிர்தல் ஆகியவற்றின் மூலம் நாய்களை கண்டுபிடிக்கின்றனர்.

குறித்த குடும்பத்தின் தலைவர் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டு, பலரது கையொப்பங்களை பெற்று நாய்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை இயற்றுவதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *