அனுராதபுரத்திற்கு அருகிலான காட்டில் தமிழரின் வணிக நிலையங்கள் கண்டுபிடிப்பு

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்தின் அருகில் தமிழர்கள் வாழ்ந்த ஒரு வணிகக் குடியிருப்பு அமைந்திருந்தது. இந்த குடியிருப்பில், வணிக நிலையங்களும் கோயில்களும் இருந்தன.
பண வசதியுடன் செல்வந்தர்களாக இருந்த இவ்வணிகர்கள், பல நாடுகளுடன் வணிகம் செய்துப் பின், ஆறு கோயில்களை அமைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
இதன் எச்சங்கள் தற்போது அடர்ந்த காட்டில் காணப்பட்டு, 6 அடி உயரம் கொண்ட 8 கருங்கற் தூண்களும், 2 மற்றும் 3 அடி உயரத்தில் குட்டையான 12 தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கலாநிதி என். கே. எஸ். திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்


