அக்கரைப்பற்று இந்துமாமன்ற திருவள்ளுவர் குருபூசை தினம் சிறப்பு கொண்டாட்டம்

உலகப்பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளை அருளி வழங்கிய திருவள்ளுவரின் குருபூஜை தினம் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் அறநெறி மற்றும் அக்கரைப்பற்று பத்திரகாளியம்மன் அறநெறி பாடசாலைகளில் (16) மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் மற்றும் பனங்காடு பாசுபதேசுவர் வித்தியாலயம் அக்கரைப்பற்று பத்திரகாளியம்மன் ஆலயம்; ஆகியோரின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற குருபூஜை தின நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆலயடிவேம்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சர்மிளா ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்ற தலைவர் பி.தணிகாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆலையங்களில் இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து மாணவர்கள் திருவள்ளுவரின் திருவுருவப்படத்தினை ஏந்தி நந்;திக்கொடிகளுடன் ஊர்வலமாக மாணவர்களின் கலாசார நிகழ்வுகளுடன் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து அறநெறி பாடசாலைகளில் இடம்பெற்ற குருபூஜையினை அடுத்து திருவள்ளுவரின் திருவுருவப்படத்தில் பூச்சொரிந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
இதேநேரம் மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பல்வேறு கலாசார துறைகளில் அறநெறிக்கல்வி ஊடாக மாணவர்கள் காட்டிய சாதனைகளை பெருமைப்படுத்தும் வகையில் பரிசில்கள் வழங்கி வைத்தனர்.
குறிப்பாக 5 ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் கோட்டமட்டத்தில் முதனிலை பெற்றதுடன் அறநெறி கல்வியிலும் முன்னிலை வகிக்கும் பனங்காடு பாசுபதேசுவர் வித்தியாலய மாணவி ர.முகன்ஷிகா நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டப்பட்டார்.


