யாழ். பல்கலையின் 38 ஆவது பட்டமளிப்பு விழா மார்ச் மாத நடுப்பகுதியில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும்; மார்ச் மாதம் 14ம், 15ம், 16ம் திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பு ஒன்று இன்று திங்கட்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழாத் தொடர்பான விபரங்களை வழங்கினார்
சொல்லப்பட்ட முக்கிய விடயங்கள் இவைதான்
- நடைபெறும் நாட்கள்: மார்ச் 14, 15, 16 (மொத்தம் 9 அமர்வுகள்)
- இடம்: பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கு
- மொத்த பட்டதாரிகள்: 2,873
- உள்வாரி மாணவர்கள்: 2,008
- வெளிவாரி மாணவர்கள்: 330
- உயர் பட்டப் படிப்புகள்: 441
விழாவின் சிறப்பம்சங்கள்:
- 50ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வாக இடம்பெறுகிறது.
- தலைமை: வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன்
- வழங்கப்படும் விருதுகள்:
- 46 தங்கப்பதக்கங்கள்
- 9 புலமைப்பரிசில்கள்
- 48 பரிசுகள்
- சிறந்த செயலாற்றுக்கான தங்கப்பதக்கங்கள் (2)
நினைவுப் பேருரைகள்:
- சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரை:
- பேராசிரியை கிலியன் ஜுலெவ்
- தலைப்பு: “Monsoon Steel: Serandib’s Contribution to Global History of Science and Technology”
- சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை:
- பேராசிரியை ஃபர்ஸானா எஃவ் ஹனிபா
- தலைப்பு: “Modern Muslim Citizenship in 1940s Ceylon: Identity, Politics, and Community Aspirations at the Moors Islamic Cultural Home”