வெற்றிநடை வானொலி இன்று லண்டன் நேரம் மாலை 7 மணிக்கு ஆரம்பம்

தமிழ் மக்களின் பண்பாட்டு வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில், வெற்றிநடை வானொலி இன்று (20.05.2025) லண்டன் நேரம் மாலை 7 மணிக்கு தனது ஆரம்ப ஒலிபரப்பை தொடங்கவுள்ளது.
வெற்றிநடை வானொலி , உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்களுடன் 24 மணிநேரமும் இசையோடு இணைந்து,
மகிழ்விக்கவிருக்கிறது.
உலகமெங்கும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை உலகமக்களிடம் எடுத்துச்செல்லும் அதேவேளை , பல நேர்காணல்களை உள்ளடக்கவும் காத்திருக்கிறது.
வானொலியின் ஆரம்ப ஒலிபரப்பில், பல பிரபலமான சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், கலையுலகப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளுடன் ஒலிபரப்பாகவுள்ளன.
நாளைய தலைமுறைகளைச் சார்ந்தவர்களின் நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கும் ஒலிபரப்பாக வெற்றிநடை வானொலி அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இன்று லண்டன் நேரம் மாலை 7 மணிக்கு ஒலிபரப்பு துவங்கவுள்ளது.
*அனைத்துலகத் தமிழர்களுக்கான தளமாக வெற்றிநடை வானொலி இணையதளத்திலும், மொபைல் செயலிகளிலும் பெறலாம் என்பதுடன், நேரலையாகவும் வெகுவிரைவில் ஒலிக்கும்.
தொடர்ச்சியாக வாழ்த்துச்செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கும் வெற்றிநடை நேயர்கள் அனைவருக்கும் அன்பு நன்றி