துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் – யாழில் பொலிஸார் கைது

குறித்த நபர் துவிச்சக்கர வண்டித் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சமயம், யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் மேறகொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, கடந்த சில மாதங்களாக நல்லூர், யாழ். நகரப்பகுதி மற்றும்
கே.கே.எஸ் வீதி ஆகிய இடங்களில் திருடப்பட்ட ஐந்து ஆண்கள் பயன்படுத்தும் துவிச்சக்கர வண்டிகளும், 11 பெண்கள் பயன்படுத்தும் துவிச்சக்கர வண்டிகளுமாகப் 16 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவுப் பொலீஸார் அறிவித்துள்ளனர்.
அண்மைய நாட்களில் துவிச்சக்கர வண்டிகளைத் தொலைத்தவர்கள் தகுந்த அடையாளங்களை காண்பித்து துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.