பிரபாகரனுக்கு சிலையா? – அமைச்சர் சந்திரசேகர் விளக்கம்

“எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட இதுவரை எங்கும் கூறாத நான், பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் கூறுவேனா? நான் ஒருபோதும் எங்கும் அவ்வாறு எந்த கருத் தையும் தெரிவிக்கவில்லை” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (22) வியாழக் கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,
நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷன ராஜகருணா எம்.பி. தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பாக நான் சபையில் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா எம்.பி. அதனை அவருக்குக் கூறியதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார். எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறு எதனை யும் கூறவில்லை.
எனது கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீர, நான் அவருடன் நெருக்கமாகப் பழகியவன். அவர் மறைந்தாலும் அந்த நினைவுகளும் உணர்வுகளும் என்றும் எனக்குள் இருக்கின்றன.