பத்து இராகங்களில் இசைக்கப்பட்ட சகலகலாவல்லிமாலை
தமிழர்கள் பொதுவாக நவராத்திரி காலங்களை பக்தியோடும் அதேவேளை இயல் இசை நாடகம் என முத்தமிழுக்கும் விழா எடுக்கும் கொண்டாட்டமாகவும் எடுத்துச்செல்வார்கள். பாடசாலைகள் முதற்கொண்டு ஊர்களின் சனசமூக நிலையங்கள் வரை பக்தியும் கொண்டாட்டமும் தொடர்ந்து செல்லும்.இன்றைய பல கலைஞர்கள் தங்கள் கலை ஆற்றுகைகளை தொடங்கியதும் அடிக்கடி மேடையேற்றியதும் கூட இந்த காலங்களாத்தான் அதிகூடுதலாக இருந்திருக்கக் கூடும்.அப்படியாக இந்த நவராத்திரி காலங்கள் எம் பண்பாடோடு இணைந்துவிட்ட காலங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதே நவராத்திரி காலங்களில் எல்லோரும் இசைக்கும் பாமாலை தான் சகலகலாவல்லிமாலை.மன்னன் பாதுஷாவுடன் உரையாட ஹிந்துஸ்தானி மொழியை கற்றுத்தேற குமரகுருபர சுவாமிகள் அவர்கள் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியைத் துதித்து பாடிய சகலகலாவல்லிமாலையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.அந்த பாமாலையை யாழ்ப்பாணம், உடுப்பிட்டி எனும் பிரதேசத்தில் இலக்கணாவத்தை எனும் ஊரில் வசிக்கும்,யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி சங்கீத ஆசிரியை திருமதி.விமலாதேவி இராஜேந்திரம் அவர்கள் பத்து வேறுபட்ட கர்நாடக சங்கீத இராகங்களில் பாடி வழங்கியுள்ளார்.
வெற்றி நடை இணையத்தளம் இன்றைய நவராத்திரி வியஜதசமி வாழ்த்துக்களை பகிர்ந்து சகலகலாவல்லிமாலை பாமாலையை வாசகர்களுடன் பக்தியுடன் பகிர்கிறது.
பாமாலை மற்றும் இராக வரிசை
வெண்டாமரைக்கன்றி- மாயாமாளவகௌளை
நாடும் பொருட்சுவை- மோகனம்
அளிக்கும் செழுந்தமிழ் -ஹிந்தோளம்
தூக்கும் பனுவல்- ஆரபி
பஞ்சப்பிதந்தரு- ஆனந்தபைரவி
பண்ணும் பரதமும்- சங்கராபரணம்
பாட்டும் பொருளும் -சக்ரவாகம்
சொல்விற்பனமும்-சண்முகப்பிரியா
சொற்கும் பொருட்கும்-கல்யாணி
மண்கண்ட வெண்குடை-மத்தியமாவதி