அழுத்வத்த,பரண கங்க பிடிய அருள் மிகு ஶ்ரீ வீரபத்ரகாளி ஆலய வருடாந்த மகோட்சவப்பெரு விழா
இந்து மஹா சமுத்திரத்தின் மணித்தீவாய் விளங்கும் இலங்காபுரியின் மத்தியில் முத்தென திகழும் கண்டி மாவட்டத்தின் இரஜவெல்ல அலுத்வத்த பரண கங்கபிடிய வில் எழுந்தருளி இருக்கும் அருள் மிகு ஶ்ரீ வீரபத்ர காளி அம்பிகை ஆலயத்தின் வருடாந்த மகோட்சவ பெருவிழா எதிர்வரும் (30.07.2023)அன்று நடைப்பெற இருக்கிறது.
(29.07.2023) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உட்சவம்,அன்றைய தினம் மாவிளக்கு பூஜை ,வசந்த மண்டப பூஜை ,வேட்டை திருவிழா என்பன நடைப்பெற இருக்கின்றன.
இதனை தொடர்ந்து( 30.07.2023) அன்று பாற்குட பவனி,காவடிகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேர் பவனி என்பனவும் இடம்பெற இருக்கின்றன.
அனைத்து நிகழ்வுகளும் கங்கபிடிய ஶ்ரீ வீரபத்ரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதம குரு அலங்கார பூசனம்,சிவஶ்ரீ மஹேஷ்வர சர்மா தலையிலும் மற்றும் கண்டி கலகிரிய மடுல்கலை காருண்ய காளிகா பீடாதிபதியும் ,ஶ்ரீ முத்துமாரியம்மன் பிரதம குரு ,கிரியாரத்தினம் யோதிஷ பிரகாசகர்,ஆகம வித்தகர் பிரம்ம ஶ்ரீ கனக சுதர்ஷன் சிவாச்சாரியார் தலைமையிலும் நடைப்பெற உள்ளன.
பூஜைகளுக்கு தேவையான பால்,இளநீர்,தேன்,பூக்கள் ,மாலைகள் போன்றவற்றை ஆலயத்திற்கு வழங்கி அன்னை அருளை பெற்றுக்கொள்ளலாம்.