ஊழல் நாடுகளில் தொடர்ந்தும் இந்தியா – சிங்கப்பூர் நியூசிலாந்து ஊழல் அற்றவை
உலகில் அதிகமாக ஊழல் நடக்கும் நாடுகளை வரிசைப்படுத்தும் சர்வதேச ஊழல் கண்காணிப்பகம் இந்த வருடமும் ஊழல் கணிப்புகளின் வரிசையை வெளியிட்டது.அதில் மிகச்சிறிய முன்னேற்றத்தைக் காட்டிய இந்தியா 40 புள்ளிகளை பெற்று 81 ஆவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.இத்தனையும் அதிகமாக பொதுத்துறையில் அதிகப்படியான ஊழல் என்று குறிப்பிட்டிருக்கிறது.
அத்துடன் சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஊழலற்ற நாடுகளில் முதலிடத்தையும் தக்கவைத்து பெருமைபெற்றுள்ளது.
கறுப்பு பணம் மோசடியை முற்றிலும் தவிர்க்க தற்போதைய அரசாங்கம் பெரு முயற்சி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அவை எவையும் ஊழலை கட்டுப்படுத்த முடியாதவையாக இருப்பது அரசை கேள்விக்குறியாக்கியுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.