இயற்பியலாளர் ஸ் ரீபன் ஹாக்கிங் மறைவு- அறிவியல் துறைக்கு பேரிழப்பு
அண்டவியல் ஆராய்ச்சி – குவாண்டம் ஈர்ப்புக்கொள்கை இரண்டையும் சம புள்ளியில் நிறுவிய பல இளந்தலைமுறை விஞ்ஞானிகளை கவர்ந்த மிகப்பெரும் மேதை இயற்பியலாளர் ஸ் ரீபன் ஹாக்கின்( Stephen William hawking) இன்று பிரித்தானியாவில் இவ்வுலகை நீங்கியுள்ளார்.
சாதாரண இயற்பியல் அறிவியல் ஆர்வலர்களும் புரிந்துகொள்ளும் படியான இவரது நூல்கள் மற்றும் எடுகோள்கள் உலகபிரசித்தமானவை, ஆய்வுத்துறையில் அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்புக்கொள்கை மிக முக்கியமானவை.
ஆராய்ச்சி துறைகளில் கருந்துளைகளுக்கும் வெப்பவியலுக்குமான தொடர்புகள் குறித்து பல கட்டுரைகளில் ஆராய்ந்தது மட்டுமல்லாமல் அவை சாதாரண மாணவர்களுக்கும் புரிந்துகொள்ளக்கூடியதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இள வயதிலேயே குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்ட ஸ் ரீபன் சக்கர வண்டியிலும் நாற்காலியிலும் தன் காலங்களை கடத்தியிருந்தாலும் தன அறிவியலுக்கான பணியை ஒரு சிறிதளவேனும் குறைத்து விடவில்லை.
தன 76 ஆவது வயதிலும் இன்னும் தனக்கு பணியிருக்கிறது என்று சொல்வது அவரின் அறிவியல் தாகத்தை வெளிப்படுத்திஇருந்தது.இவர் எழுதிய A brief history of Time என்ற நேரத்தின் சுருக்க வரலாறு என்ற நூலும் The Universe in a Nutsell என்ற நூலும் உலகில் அதிகளவில் வ்ற்பனையானது மட்டுமல்லாது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நூல் ஆகும்.
நவீன அறிவியலுக்கு பாதை அமைத்துத் தந்த சமகால முதுபெரும் விஞ்ஞானி ஸ் ரீபன் ஹாக்கிங் அவர்களின் இழப்பு உலக அறிவியல் துறைக்கு மிகப்பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.vetrinadai.com/news/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-sir-roger-bannister-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/