பிரான்ஸின் கறுப்பு தினமாக நாளை வேலை நிறுத்தம்
நாளை , 22 ம் திகதி மார்ச் வியாழக் கிழமையை ஃப்ரான்ஸின் பொது போக்குவரத்து தொழிற் சங்கங்கள் “கறுப்பு தினமாக” அறிவித்துள்ளது.
ஆளும் “ரிப்பப்ளின் ஆன் மார்ஷ்” கட்சி , எதிர் வரும் மாதங்களில் , இரயில்வே துறையில் (SNCF) நடைமுறைப் படுத்தவிருக்கும் பல்வேறு சீர்திருத்தங்களை எதிர்த்து ஒட்டு மொத்த ஃப்ரன்ச் இரயில்வே தொழிற் சங்கங்கள் நாளை வியாழக் கிழமை இந்த அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
இதனால் , நாளை ஃப்ரான்ஸ் முழுவதும் பெரும்பாலான இரயில்கள் , பேருந்துகள் , பாதாள இரயில்கள் இயங்காது , இதனால் பொது மக்களும் , பணிக்கு செல்பவர்களும் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள் என அறியப்படுகிறது.
ஆளும் ஃப்ரன்ச் அரசு தொடர்ந்து அரசுத் துறை மற்றும் பொதுத் துறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ளதால்,தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் தங்களின் வேலை நிறுத்தங்களின் மூலம் ஃப்ரன்ச் அரசிற்கு எதிர்ப்பை உணர்த்திய வண்ணம் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, இன்ன பிற பொது சேவை தொழிற்சங்கங்களும் வரும் நாட்களில் வேலை நிறுத்தங்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த ஃப்ரன்ச் இரயில்வே போக்குவரத்து வேலை நிறுத்தத்தால் பாரீஸ் நகரம் நாளை ஸ்தம்பிக்கப் போவது நிச்சயம் என்பது எதிர்வு கூறப்படுகிறது
எழுதுவது கமல்ராஜ் ருவியே
http://www.vetrinadai.com/news/n-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9/