இறுதித் துளி – சிந்திக்க வேண்டியது தான்
எதிர்காலத்தில் நீரால் ஏற்படும் சமவுடமை மாற்றத்தை வெறும் ஒரு நிமிடத்துக்குள் சொல்கிறது இந்தக் குறும்படம் இறுதித் துளி (Final Drop).தண்ணீர் தினமாகிய இன்று எம் வளமான நீரை நாம் சேமிக்க வேண்டியதன் அவசியத்தை நமது சமூக நடப்பியல்புகளுக்கு ஊடாக சிறப்பாக குறுந்திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் மதி சுதா. வெறும் கைபேசியினால் மிகத்தெளிவாக படமாக்கப்பட்டிருக்கும் இந்த ஒரு நிமிட குறுந்திரை அகில இலங்கை அளவில் விருதுப்பட்டியலிலும் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
சறுக்கி விழுவதும் தண்ணீரில் தான் எனினும் உலகம் எதிகாலத்தில் சறுக்குமோ என்ற சவால் இந்த நுற்றாண்டில் மிகப்பெரிய சவால்.”தண்ணீரும் இல்லாமல் போகுமா” என்று ஆச்சரியத்துடன் சிந்திக்கும் நம்மில் பலர் இந்த குறும்படத்தை ஒரு தடவை பாருங்கள். நிச்சயம் தண்ணீர் வீணாகும்/வீணாக்கும் போது ஒரு தடவை என்றாலும் இந்த திரை உங்கள் கண் முன் வந்து போகும்.
இதையும் படிக்க
https://www.vetrinadai.com/featured-articles/water-day-2018-nature-for-water/