ஃப்ரான்ஸில் முதல் முறையாக 24 மணி நேர சூப்பர் மார்கெட்
ஃப்ரான்ஸில் முதல் முறையாக 24 மணி நேர சூப்பர் மார்கெட் திறக்கப்பட்டது .
எத்தனை மணிக்கு சூப்பர் மார்கெட் மூடப்படும் ? என்ற கேள்வி இனிமேல் பாரீஸில் சாத்தியமில்லை . காரணம் பாரீஸில் முதன் முறையாக 24 மணி நேரமும் இயங்கும் சூப்பர் மார்க்கெட்டான ” ஃப்ரான்ப்ரி ” FRANPRIX , இந்த மாத துவக்கம் முதல் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது .
இது ஒரு பரிசோதனை முயற்சியே , திறக்கப்பட்ட இந்த சூப்பர் மார்கெட் ஈட்டும் வருவாயைப் பொருத்தே மேலும் பல 24 மணி நேரக் கடைகள் திறக்கப்படலாம் .என்று காசினோ குழுமம் CASINO GROUP அறிவித்துள்ளது .
எப்படி இந்த சூப்பர் மார்கெட் செயல்படுகிறது ?
இந்த சூப்ப்ர் மார்கெட்டின் காசாளர்கள் எப்போதும் போல இரவு 8.50 மணிக்கு தங்கள் வேலையை முடித்து விட்டு சென்றுவிடுவார்கள். அப்போதிலிருந்து அக் கடையானது 2 பாதுகாவலர்கள் பொறுப்பில் வந்து விடுகிறது அதன் பிறகு கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும்பொருட்களுக்கானத் தொகையை கடைக்குள் நிறுவப்பட்டிருக்கும் தானியங்கி இயந்திரத்தில் மூலம் செலுத்த வேண்டும் , அப்படி ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் , அருகே இருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினால் , உங்கள் பிரச்சனைக்கான பதில் தொலைத் தொடர்பு மூலம் பெற வழி வகைச் செய்யப்பட்டுள்ளது .
இந்த 24 மணி நேர சூப்பர் மார்கெட்டில் இரவு நேரங்களில் மது விற்கப்படுவதில்லை .
24 மணி நேர சூப்பர் மார்கெட் திறக்கப்பட்டதால் , பாரீஸ் வாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் …