கண்ணீரோடு பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஸ்ட்ரீவ் ஸ்மித்
விளையாட்டின் போது பந்தை சேதப்படுத்திய குற்றத்தில் மாட்டிய அவுஸ்ரேலிய அணியில் அணித்தலைவராக இருந்த ஸ்ட்ரீவ் ஸ்மித் கண்ணீர் விட்டு அழுது தன பகிரங்க மன்னிப்பை கோரினார்.கடந்த கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் பந்து வீசிய அவுஸ்ரேலிய அணி பந்த சேதப்படுத்திய குற்றத்தில் அணித்தலைவர் ஸ்மித் மற்றும் வானோர் ஆகியோருக்கு உலகப்போட்டிகளில் கிரிக்கட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.அதனைடைடிப்படையில் செய்தியாளர்களை சந்தித்த அணித்தலைவராக இருந்த ஸ்மித் அவுஸ்ரேலிய அணியின் ரசிகர்களிடம் கிரிக்கட் நலன் விரும்பிகள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பை கேட்டார்.அவர் விட்ட கண்ணீர் அனைவரையும் கண் கலங்க வைத்தது எனினும் அணித்தலைவராக அந்த குற்றங்களுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து முடிவெடுப்பதில் ஏற்றபட்ட தவறாகி விட்டது என்று கண்ணீரோடு விடைபெற்றார்.
https://www.vetrinadai.com/featured-articles/1109/