TSSA UK நடாத்தும் உதைபந்தாட்டத் திருவிழா
தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் TSSA UK நடாத்தும் வருடாந்த உதைபந்தாட்டப் போட்டி நிகழ்வுகளுக்கான பெரும் கொண்டாட்டம் இம்முறையும் வரும் மே மாதம் வரும் வங்கி விடுமுறை திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேமாதம் 7ம் திகதி வரும் இந்த உதைபந்தாட்ட கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை அணிகள் பங்குபற்றுவதற்கு தயாராகி வருகின்றன. TSSA UK இன் வெற்றிக்கிண்ணங்களை வெற்றிபெற்று சாதனை அணிகளாக தங்களை நிரூபிக்க அனைத்து அணிகளும் தங்களை முழு மூச்சாக பயணிக்கும் என்று எதிர்வுகூறப்படுகிறது.
25 ஆண்டுகள் கடந்து ஐக்கிய இராச்சியத்தில் தனியான தனித்துவத்துடன் பயணிக்கும் TSSA UK இந்த முறையும் தங்கள் போட்டி ஏற்பாடுகளை அன்றைய ஒரு உதைபந்தாட்ட திருவிழா போலவே நடாத்த தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.
அங்கு வரும் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அன்றைய நாள் ஒரு மகிழ்ச்சி பொழுதாக இருக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைகிறது.
பங்குபற்றும் பாடசாலை அணிகள் எந்த எந்த அணிகளுடன் மோதும் என்பது முன்கூட்டிய அணிகளின் சந்திப்பில் தீர்மானிக்கப்படும்.
9,11,13,15,17 மற்றும் 19 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கான போட்டிகள் , 40,50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டிகள் , மற்றும் திறந்த வயதினருக்கான போட்டி என பல் வயதினரையும் உள்ளடக்கியதாக போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கரப்பந்தாட்டம்,கயிறிழுத்தல், மென்பந்து கிரிக்கெட்,சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் மற்றும் பாரம்பரிய போட்டிகள் ஆகியனவும் ஏற்பாடு செய்யப்பட்புளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் போட்டியன்று மைதானம் மக்கள் கூட்டத்தால் நிரம்பும் என்று எதிர்வுகூறப்படுகிறது.
இந்த உதைபந்தாட்ட திருவிழா இம்முறையும் Wimbledon Common Extentions மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.vetrinadai.com/featured-articles/steve-smith-former-australian-cricket-captain/