எய்ட்ஸ் பற்றிய ஆராய்ச்சியில் நெதர்லாந்து, சுவீடன், இந்தியா.
இந்தியாவுடன் இணைந்து, நெதர்லாந்தும், சுவீடனும் எய்ட்ஸ் நோய் பற்றியும் அதற்கான மருந்துகள் பற்றியும் ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கின்றன. இந்த மூன்று நாடுகளும் இந்த நோய் பற்றித் தங்களிடம் உள்ள அறிவையும், அனுபவங்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும். அதன் மூலம் ஒவ்வொரு நாடும் தன்னிடம் உள்ள திறமையை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும்.
இப்படியான பகிர்தல்கள் எய்ட்ஸ் நோயைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் புரிந்துகொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோய்க்காக தற்போது இருக்கும், பாவிக்கப்படும் மருந்துகள், அவைகள் எப்படியான முறையில் வெவ்வேறு காலநிலை, சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படலாம் என்பதும் இவ்வாராய்ச்சித் திட்டத்தில் அடங்கும்.
அத்துடன் இம் மூன்று நாடுகளின் மக்கள் தொகையில் ஏற்படும் வித்தியாசங்கள், அதனால் எதிர்காலத்தில் எய்ட்ஸ் நோய் இப்பிராந்தியங்களில் எவ்விதமான தாக்கங்களை உண்டாக்கும் என்பது பற்றியும் இந்த மூன்று நாடுகளும் ஆராயும் என்று அறிவிக்கப்படுகிறது.