கேரளாவில் வைரஸ் பரப்பும் வௌவால்கள்
பழங்களைத் தின்னும் வௌவால்களால் பரப்பப்படும் கிருமியொன்று கேரளாவின் பெரும் பிராந்தியை ஏற்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் எட்டு இறப்புக்கள், பாதிக்கப்படுகிறவர்களில் 70 விகிதத்தினரின் உயிரைக் குடிக்கும் நிப்பா வைரஸினால் உண்டாக்கப்பட்டவை என்று கருதப்பட்டு அதுபற்றிய விசாரணைகள் நடாத்தப்படுகின்றன.
முக்கியமாக கோழிக்கோடு பகுதியில் பெரும் பயத்தை மக்களிடையே இவ்வைரஸ் ஏற்படுத்தியிருப்பதால் இந்திய அரசின் மருத்துவ விற்பன்னர்களை அங்கே அனுப்பியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மனிதர்களையும், மிருகங்களையும் பாதிக்கும் நிப்பா வைரஸ் 1998 இல் முதல் முறையாக மலேசியாவில் கவனிக்கப்பட்டது. 2001 இலும் 2007 இலும் இவ்வைரஸ் இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களில் பரவியிருக்கிறது. அதனால் சுமார் 50 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.