இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கிறதா ஐ.ஒன்றியம்?
மயக்க மருந்து கொடுக்காமல் மிருகங்களை இறைச்சிகாக வெட்டுவதை அனுமதி பெற்ற இறைச்சிக் கடைகளில் மட்டுமே செய்யலாம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியச் சட்டம். அக்காரணத்தால் தங்களது பெருநாள் சமயத்தில் தமது தேவைகளுக்கு இறைச்சி கிடைப்பது தாமதமாகிறது. எனவே அது ஒரு மதத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பெல்ஜியத்தில் அண்ட்வெர்ப்பன் நகரசபைக்கு எதிராக அங்கே வாழும் முஸ்லீம்கள் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள்.
இஸ்லாமியப் பெருநாட்கள் நடக்கும் சமயங்களில் தற்காலிகமான இறைச்சி வெட்டும் கடைகள் அனுமதிக்கப்படவேண்டும், என்பதே பெல்ஜிய முஸ்லீம்களின் கோரிக்கையாகும்.
அவர்களது வழக்கை எடுத்துக்கொண்ட ஐ.ஒன்றிய நீதிமன்றம் தற்காலிகமான இறைச்சி வெட்டும் கடைகளை ஒழுங்கு செய்வது இலகுவான விடயமல்ல. அதற்கான நடவடிக்கைகள் எடுப்பது நகரசபைக்கு தகுந்த சமயத்தில் முடிவதில்லை என்பதே நிலைமை என்று சுட்டிக்காட்டியிருக்கும் ஐ.நீதிமன்ற அது ஒரு மத நம்பிக்கைக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்று தீர்ப்பளித்திருக்கிறது.