தேசியமட்ட சம்பியன் யாழ் மகாஜனா
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டப்போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் சம்பியன் ஆகியுள்ளது.
அனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொழும்பு கந்தாணை டி மெசனோல்ட் வித்தியாலயத்தை மகாஜனா எதிர்கொண்டது.
போட்டியின் முடிவில் எவ்வித கோல்களும் இன்றி ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் ( penalty kicks) 3:2 என்ற கோல் கணக்கில் மகாஜனா வெற்றி பெற்று 2018 ம் ஆண்டின் அகில இலங்கை சம்பியனாகியது.
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக மகாஜனா அணித்தலைவர் வ.ஜக்சனும் இந்த சுற்றுப்போட்டியின் தொடர் நாயகனாக மகாஜனா அணியின் உபதலைவர் ச.கனுயனும் (ராசாவும்) தெரிவாகினர்.
யாழ் மாவட்ட அணியாக தேசிய நிலை சம்பியன் என்ற மகுடம் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமையாக அமைந்துள்ளது அன்று விளையாட்டு விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.