ஹாட்லியின் நாத விநோதம் 2019
ஹாட்லிக்கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர்கள் சங்கம் பெருமையுடன் வருடாவருடம் பிரமாண்டமாக வழங்கும் நாத விநோதம் அரங்க நிகழ்ச்சி இந்த வருடமும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
நாத விநோதம் 2019 இசையும் நவீன நடனமும் ஒரே மேடையில் இணையும் கலை அரங்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அது மட்டுமல்லாமல் முற்றிலும் ஈழத்தமிழ் கலைஞர்களின் அரங்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த நிகழ்வு ஏற்கனவே பல ஆண்டுகளாக ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்களால் வெற்றிகரமாக நெறிப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் மிகப்பிரபல்யம் வாய்ந்ததாகும்.
தென்னிந்தியாவில் இருந்து எஸ் பி பாலசுப்பிரமணியம் , கேஜே ஜேசுதாஸ், உன்னிகிருஷ்ணன், ராஜேஸ் வைத்யா,கார்த்திக் சைந்தவி, போன்ற கலைஞர்களையும் ஈழத்திலிருந்து நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி கலைஞர்கள் குழுவினர் போன்றவர்களையும் கண்ட நாதவிநோதம் அரங்கம் இந்த வருடம் முற்றிலும் புலம்பெயர் நாடுகளிலும் களத்திலும் பிரபல்யமான கலைஞர்களை உள்ளடக்கிய அரங்காக பிரமாண்டமாக அமையவிருக்கின்றது.
மேமாதம் 26ம் திகதி நாதவிநோதம் 2019 இதற்குரிய நாள். லண்டனில் புகழ் பூத்த ரெயின்போ இசைக்குழுவின் பின்னணி இசையோடு பிரபலமான நடனக் கலைஞர்களும் இணைந்து சங்கமிக்கும் இந்த நிகழ்வு watersmeet Theater இல் நடைபெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.